புதன், 14 ஜூலை, 2010
வள்ளல் ஆனந்தக்குமார்
செவ்வாய், 1 ஜூன், 2010
பேராசிரியர் டாக்டர் சி.என்.தெய்வநாயகம்
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010


௧௧௧௧௧ டாக்டர் தெயவநியகம் அவர்கள் 1998 ஆம் ஆண்டு ஓர் அழைப்பை கொடுத்தார்கள் அதாவது பரம்பரை, பாரம்பரிய மற்றும் அனுப மருத்துவர்கள் தங்களிடம் எய்ட்ஸ் (தேய்வு நோய்) வியாதிக்கு ஏதும் மருந்து இருப்பின் தாம்பரத்தில் உள்ள எமது சானட்டோரியம் மருத்துவமனைக்கு வாருங்கள் தங்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருகிறேன். தேய்வு நோய்க்கு (AIDS) தங்கள் சித்த மருத்துவத்தில் குறிகுண அன்றி வியாதி அடிப்படை தனிலோ ஆய்வு நோக்கில் மருந்துகளை தாருங்கள். என அழைப்பு விடுத்தார்கள்.
11111 அதன் முகத்தான் சுமார் நாற்பது சித்த மருத்துவர்கள் சென்றோம். முதல் நாள் தேய்வு நோய் என்றல் என்ன? இது முதலில் எப்போது நம்மால் அறியப்பட்டது? எப்படி பரவுகிறது? ஆங்கில மருத்துவத்தில் என்ன என்ன மருந்துகளை எது எதுக்கு தருகின்றோம் அதன் பலன்கள் யாது இதற்க்கான சோதனை முறைகள் என்ன? இந்த வைரஸ் எப்படி இருக்கும்? எங்கு பதுங்கி இருப்பதால் இதனை அழிக்க இயலவில்லை எனபது போன்ற பல விபரங்களை பல விரிவுரியாலர்களை கொண்டு விளக்கினர்.
11111 நிறைவாக டாக்டர் அவர்கள் சித்த மருத்துவத்தின் பார்வைதனில் என்ன மருந்து கொடுத்தால் வியாதி அழியும் அல்லது கட்டுக்குள் வரும் என்று ஆய்ந்து தங்கள் மருந்துகளை தாருங்கள் , நமது தமிழகத்தின் சித்த மருத்துவத்தில் இந்த தேய்வு நோய்க்கு மருந்து இருக்கும் என்பது எனது நம்பிக்கை. தங்கள் மரபுவழி , பாரம்பரிய அல்லது அனுபவ மருந்துகளை இங்குள்ள நேயர்களுக்கு கொடுத்து இவர்களின் தொந்தரவை குறைந்தபட்சம் குறைக்கவாவது உதவுங்கள் . நன்றி. என கேட்டுக்கொண்டார்.




